சினிமா

’ராதே ஷ்யாம்’ அப்டேட் வராததால் அப்செட்; பிரபாஸ் ரசிகரின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு!

நடிகர் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் குறித்த அப்டேட் எதுவும் வராததால் அவரது ரசிகர் தற்கொலை கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’ராதே ஷ்யாம்’ அப்டேட் வராததால் அப்செட்; பிரபாஸ் ரசிகரின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கு நடிகரான பிரபாஸ் 'பாகுபலி', 'சாஹோ' போன்ற படங்களில் மூலம் இந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'ராதே ஷ்யாம்' படத்தைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ராதே ஷ்யாம்' படத்தின் அப்டேட் எதுவும் வெளிவராததால் நடிகர் பிரபாஸின் ரசிகர் ஒருவர் படக்குழுவிற்குத் தற்கொலை கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ரசிகரின் தற்கொலை கடிதத்தில், 'ராதே ஷ்யாம்' படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.

என்னுடைய தற்கொலைக்கு யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும், இயக்குநர் ராதா கிருஷ்ணகுமாரும்தான் காரணம். தற்கொலை கடிதம் எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய மரணத்துக்குப் பிறகாவது ‘ராதே ஷ்யாம்’ படம் குறித்து அப்டேட் கொடுப்பார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ரசிகரின் இந்த தற்கொலைக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே ‘ராதே ஷ்யாம்’ படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories