சினிமா

சென்னை மழை பாதிப்பில் சிக்கிய சாலையோர வாசிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உணவு வழங்கி உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

சென்னை மழை பாதிப்பில் சிக்கிய சாலையோர வாசிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விடாது மழை பெய்து வருகிறது.

இதனால் மழை நீர் ஆங்காங்கே தேங்கிய வண்ணம் உள்ளது. அவ்வாறு தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினர் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அதன்படி சென்னையில் மழை வெள்ளத்தால் சாலையோரங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேடிப் போய் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories