சினிமா

மீண்டும் மாற்றுத்திறனாளி இளைஞரை திரையுலகில் அறிமுகப்படுத்திய இமான்... கீழக்கரை சம்சுதீனுக்கு வாய்ப்பு!

'அண்ணாத்த’ திரைப்படத்திலும் புதிய பாடகரை அறிமுகப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.

மீண்டும் மாற்றுத்திறனாளி இளைஞரை திரையுலகில் அறிமுகப்படுத்திய இமான்... கீழக்கரை சம்சுதீனுக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இசையமைப்பாளர் டி.இமான் பல புதிய பாடகர்களை திரையுலகில் அறிமுகம் செய்து வருகிறார். அந்தவகையில், ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் புதிய பாடகரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும், ‘அண்ணாத்த’ படத்தின் 4வது பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த்துடன் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

‘அண்ணாத்த’ படத்தின் 4வது பாடல், நேற்று மாலை 6 மணியளவில் வெளியானது. இமான் இசையில் அருண் பாரதி எழுதிய ‘வா சாமி’ என்ற இந்தப் பாடலை முகேஷ் முஹம்மது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலை மிகச்சிறப்பாக பாடி சமூக வலைத்தளங்களில் வைரலான மாற்றுத்திறனாளியான திருமூர்த்தியை அழைத்துப் பேசி அவரை திரைப்படத்தில் பாட வைப்பதாக உறுதியளித்தார் இமான். அதன்படி இயக்குநர் ரத்தினசிவா இயக்கத்தில் ஜீவா நடித்த `சீறு’ படத்தில் ‘செவ்வந்தியே’ பாடலை திருமூர்த்தியை பாடவைத்தார் இமான்.

அதேபோல, கீழக்கரை சம்சுதீன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை ‘அண்ணாத்த’ மூலம் அறிமுகம் செய்துள்ளார் இமான். பல புதிய பாடகர்களை உருவாக்கிவரும் டி.இமானுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துககளை தெரிவித்து வருகின்றனர்

பாடலை பாடியவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இமான். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories