சினிமா

”அவருக்கு கொடுத்த வாக்கை இனி ஆண்டுதோறும் நிறைவேற்றுவேன்” - மறைந்த நடிகர் விவேக் பற்றி ஆர்யா பேட்டி!

நடிகர் விவேக் இருக்கும் போது அளித்திருந்த வாக்குறுதியை இனிமேல் நிறைவேற்றுவேன் என ஆர்யா தெரிவித்துள்ளார்.

”அவருக்கு கொடுத்த வாக்கை இனி ஆண்டுதோறும் நிறைவேற்றுவேன்” - மறைந்த நடிகர் விவேக் பற்றி ஆர்யா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மரம் நடும் பணியை மேற்கொள்ள உள்ளேன் என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது அகில இந்திய ஆர்யா ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தனது ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆர்யா, மறைந்த நடிகர் விவேக், ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நடுவது வழக்கமாக வைத்திருந்ததார். அதற்காக என்னிடமும் மரக்கன்று நடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தார்.

நடிகர் விவேக் இருக்கும்போது அவருக்கு மரக்கன்றுகளை நடுவேன் என்று உறுதி அளிக்கிறேன். ஆனால் தற்போது அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது. இனி ஆண்டுதோறும் மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொள்ளவுள்ள உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories