வைரல்

இது ’தெறி Lite’ : விஜய் பட சண்டைக் காட்சியை தத்ரூபமாக Recreate செய்த திருவனந்தபுரம் பாய்ஸ்! (Video)

விஜய் நடிப்பில் வெளியான தெறி பட சண்டைக் காட்சியை தத்ரூபமாக படம் பிடித்துள்ள திருவனந்தபுரம் பாய்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ’தெறி Lite’ : விஜய் பட சண்டைக் காட்சியை தத்ரூபமாக Recreate செய்த திருவனந்தபுரம் பாய்ஸ்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரைப்படங்களில் வரும் காட்சிகள், பாடல்களை டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸில் பதிவேற்றி லட்சக்கணக்கில் viewsகளை குவித்து வருகின்றனர் இணைய வாசிகள்.

இது வெறும் viewsகளாக மட்டும் இருந்துவிடாமல் பயனர்களின் கலைத்திறமையும் வெளி உலகத்துக்கு தெரிய வருகிறது. இதன் மூலம் சினிமாவில் ஜொலிக்கக் கூடிய வாய்ப்புகளையும் அவர்கள் பெறுகின்றனர்.

இப்படி இருக்கையில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டாளம் ஒன்று திருவனந்தபுரம் பாய்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பாடல்கள் மற்றும் படக் காட்சிகளை ரீக்கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களது பதிவுக்கு இணையத்தில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் சூர்யாவின் அயன் படத்தில் வரும் பளபளக்குற பகலா நீ பாடலை மறு உருவாக்கம் செய்து பகிர்ந்தது பெருமளவில் வைரலனாது. கேமிரா, எடிட்டிங், டான்ஸ், நடிப்பு என அச்சுப்பிசகாமல் படத்தில் வருவது போலவே நடித்து கலக்கியிருந்தார்கள் திருவனந்தபுரம் பாய்ஸ்.

தற்போது விஜய்யின் தெறி பட சண்டைக் காட்சியை ரீக்கிரியேட் செய்து பதிவேற்றியிருக்கிறார்கள். சென்னை அண்ணா சாலையில் நடைபெறுவது போன்ற காட்சியை உண்மையில் green matல் எடுத்திருப்பார்கள். ஆனால் திருவனந்தபுரம் பாய்ஸ் மெயின் ரோட்டிலேயே அந்த சண்டையை காட்சி படப்பிடிப்பை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இந்த வீடியோ தற்போது இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வெறித்தனமாக வைரலாகி பட்டையக் கிளப்பி வருகிறது. மேலும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories