சினிமா

ஒரு நாளைக்கு 4000 கால்ஸ், மெசேஜ்: ’ஸ்க்விட் கேம்’ சீரிஸால் நொந்து போன பயனர் - Netflix எடுத்த முடிவு என்ன?

நெட் ஃப்ளிக்ஸில் வெளியான ஸ்க்விட் கேம் சீரிஸில் இடம்பெற்ற தொலைப்பேசி எண்ணால் நடப்பு பயனர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஒரு நாளைக்கு 4000 கால்ஸ், மெசேஜ்: ’ஸ்க்விட் கேம்’ சீரிஸால் நொந்து போன பயனர் - Netflix எடுத்த முடிவு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனித்துவமான திரைப்படங்களை படைப்பதில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் கொரியன் சினிமா துறையில் இருந்து அண்மையில் வெப் சீரிஸாக நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது ஸ்க்விட் கேம். இதுதான் தற்போது இணையவாசிகளின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.

சைலன்ஸ்ட் என்ற சர்ச்சைகள் நிறைந்த படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை பெற்ற ஹ்வாங் டோங் ஹ்யூக் திரைக்கதையின் உருவாகியதுதான் ஸ்க்விட் கேம் சீரிஸ். 9 எபிசோட்களை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸ் நெட் ஃப்ளிக்ஸில் வெளியான மற்ற சீரிஸ்களின் சாதனைகளை முறியடித்து முன்னிலையில் உள்ளது.

ஒரு நாளைக்கு 4000 கால்ஸ், மெசேஜ்: ’ஸ்க்விட் கேம்’ சீரிஸால் நொந்து போன பயனர் - Netflix எடுத்த முடிவு என்ன?

குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டை மையமாக வைத்து 6 விளையாட்டுகளை கொண்ட இந்த கேமை பணத்துக்காக 456 பேர் பங்கேற்று பின்னர் உயிரை காப்பாற்றுவதற்காக விளையாட்டில் இறங்கி வெற்றிக்கண்டார்களா இல்லையா என்பதே சீரிஸின் கதை.

இப்படி இருக்கையில் இந்த வெப் சீரிஸில் வரும் முக்கியமான காட்சியில் இடம்பெற்றிருக்கக் கூடிய தொலைப்பேசி எண்தான் பரபரப்பை கிளப்பியுள்ளது. என்னவெனில், அந்த காட்சியில் வந்த தொலைப்பேசி எண் நடப்பு பயனரின் எண் எனவும், ஸ்க்விட் கேம் சீரிஸ் வந்ததை அடுத்து தனக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பணி ரீதியான தொடர்புகள் மேற்கொள்வதால் தன்னால் அந்த எண்ணை மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெப் சீரிஸை தயாரித்த சைரன் பிக்சர்ஸுடன் கலந்து பேசியுள்ள நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் அந்த குறிப்பிட்ட காட்சியில் வரும் தொலைப்பேசி எண்ணை கத்தரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories