சினிமா

”நயன்’க்கு டப்பிங் பேச ரொம்ப சிரமப்பட்டேன்” - அண்ணாத்த பட அனுபவத்தை பகிர்ந்த தீபா வெங்கட்!

அண்ணாத்த படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் பேசிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் தீபா வெங்கட்.

”நயன்’க்கு டப்பிங் பேச ரொம்ப சிரமப்பட்டேன்” - அண்ணாத்த பட அனுபவத்தை பகிர்ந்த தீபா வெங்கட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் 168வது படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்களாம். இதுபோக, குஷ்பூ, மீனா, சூரி என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ராஜா ராணி படம் முதல் நயன்தாராவுக்கு டப்பிங் பேசி வரும் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் அண்ணாத்த படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் கொடுத்தது பற்றிய சிறு துளியை பகிர்ந்துள்ளார். அதனை விகடன் இணையதளம் பகிர்ந்துள்ளது.

அதில், நயன்தாராவுக்கும் எனக்கும் இருக்கும் அன்பு மிகவும் ஸ்பெஷலானது. டப்பிங் வேலைகள் மட்டுமல்லாமல் பெர்சனலாகவும் நாங்கள் இருவரும் அதிகம் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படி இருக்கையில் அண்ணாத்த படத்துக்காக அவங்களுக்கு டப்பிங் பேசினப்போ கொஞ்சம் ஸ்ட்ரக் ஆகிட்டேன்.

ஏனெனில், நான் மிகப்பெரிய ரஜினி ரசிகை. அவரோட கூட நயன்தாராவுக்கு வர வசனங்கள பேசுறப்போ யார பாக்குறதுனே தெரியாம போயிருச்சு. என்ன மறந்து ஒரு ரசிகையா படத்துல மூழ்கிட்டேன்.” எனக் தீபா வெங்கட் கூறியிருக்கிறாராம்.

banner

Related Stories

Related Stories