சினிமா

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாஸ் காம்போ? - விஜய் 66 அப்டேட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் 66 படம் தொடர்பான முக்கியமான இரு தகவல்கள் வெளியானது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாஸ் காம்போ? - விஜய் 66 அப்டேட்டால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65வது படமாக தயாராகி வருகிறது பீஸ்ட். இந்த படத்தின் படபிடிப்பு முடிவதற்கு முன்பே, விஜய்யின் அடுத்த படத்துக்கான அறிவிப்புகள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு என உருவாக இருக்கும் விஜய் 66 படத்தை வம்சி பைதிபள்ளி இயக்குவதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது முக்கிய அப்டேட்டாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வட்டமடித்து வருகிறது.

அது, கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என விஜய்யின் படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் விஜய் 66 படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - பிரகாஷ்ராஜ் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

இதேபோல, விஜய் 66 குறித்து மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கு திரை உலகின் முன்னணி மாஸ் ஹீரோவான மகேஷ் பாபுவின் மகள் சிதாரா விஜய் 66 படத்தில் இணைய இருக்கிறாராம். படத்தின் கதை பிடித்துப்போனதால் மகேஷ் பாபு இதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories