சினிமா

நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது ஏன்? : இயக்குநர் சொன்ன காரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.

நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது ஏன்? : இயக்குநர் சொன்ன காரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.

நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், சர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜய் பூபதி இயக்கியுள்ளார்.

‘மகா சமுத்திரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியாகும் எனது படம் என மகா சமுத்திரம் குறித்து பலமுறை சித்தார்த் பெருமிதமாக குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது விவாதங்களைக் கிளப்பியது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள படத்தின் இயக்குனர் அஜய் பூபதி, அறுவை சிகிச்சை ஒன்றுக்காக சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால், அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories