சினிமா

OTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள LIFT படம் வரும் அக்டோபர் 1ம் தேதி Disney+ Hotstar-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

OTTயில் வெளியாகும் நடிகர் கவினின் ‘லிஃப்ட்’ - மோஷன் போஸ்டரை வெளியிட்ட 6 முன்னணி இயக்குநர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், நாடகத்தின் கதாயாகன் எனத் தொடர்ந்து ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தின் நாயகனாக அறிமுகமானர் கவின். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி பிரபலம் ஆனார். இதனையடுத்து கவின், வினித் இயக்கத்தில் ‘லிஃப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்துப்பணிகளை முடிந்து உள்ள நிலையில், மோஷன் போஸ்டரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

இந்த பாடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படம் நேரடியாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இது கவின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories