சினிமா

பாடகர் SPBக்கு சிறப்பு மரியாதை செலுத்த 'அண்ணாத்த' படக்குழு திட்டம் : வெளியானது புது அப்டேட்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் முதலாமாண்டு நினைவு நாளில் வெளியாகவிருக்கும் ‘அண்ணாத்த’ சிங்கிள்.

பாடகர் SPBக்கு சிறப்பு மரியாதை செலுத்த 'அண்ணாத்த' படக்குழு திட்டம் : வெளியானது புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி.

குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு சேர்ந்து நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளி ரிலீஸில் தீர்மானமாக இருப்பதால் படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

பாடகர் SPBக்கு சிறப்பு மரியாதை செலுத்த 'அண்ணாத்த' படக்குழு திட்டம் : வெளியானது புது அப்டேட்!

அண்மையில் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் கடைசியாக ரஜினிக்கு பாடிய பாடல் அண்ணாத்த படத்தின் ஓபனிங் பாடல்.

ஆகவே, அந்த பாடலை செப்டம்பர் 25ம் தேதி அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர் விவேவா எஸ்.பி.பி. பாடிய பாடலை இயற்றியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories