சினிமா

பச்சைக் கொடி காட்டிய கங்குலி; படமாகிறது தாதாவின் வாழ்க்கை - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ’தாதா’ கங்குலியின் வாழ்க்கை படமாகிறது.

பச்சைக் கொடி காட்டிய கங்குலி; படமாகிறது தாதாவின் வாழ்க்கை - உற்சாகத்தில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. சச்சின், தோனி, கபில்தேவ் ஆகிய இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரர்களின் வாழ்க்கை திரைப்படமானதை தொடர்ந்து இப்போது மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர்களின் வாழ்க்கையும் படமாக உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதனை கங்குலியே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், “கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது எனக்கு தன்னம்பிக்கையையும் தலை நிமிர்ந்து முன்னோக்கி செல்வதற்கான தகுதியையும் கொடுக்கிறது. நினைவில் கொள்ளவேண்டிய நெருக்கமான பயணத்தை லவ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து திரைக்கு கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அங்குர் கார்க், ரஞ்சன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற படக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மொழியை மையமாக வைத்து Pan India திரைப்படமாக இது உருவாக இருக்கிறது.

கங்குலி 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். மேலும் தோனி, சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், முகமது கைப் போன்ற சிறந்த வீரர்களை இந்திய அணிக்கு கொண்டுவந்ததும் சவுரவ் கங்குலி தான்.

தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்ததோடு, சூதாட்ட சர்ச்சையில் இருந்து இந்திய அணியை மீட்டு மறு உருவாக்கம் செய்தவர் இவர் தான். இதனால் இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கினால் அதில் இந்திய அணியின் வலிகள் நிறைந்த பயணம் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இப்படம் கங்குலி எழுதிய ‘A Century Is Not Enough’ என சுயவாழ்க்கை வரலாற்று நூலை அடிப்படையாக கொண்டு உருவாகக்கூடும் என பேசப்படுகிறது.

banner

Related Stories

Related Stories