சினிமா

2 இசையமைப்பாளர்கள், கோலிவுட் பிரபலங்கள்.. அடுத்தடுத்து வெளியான அட்லீ-ஷாருக் பட அட்டகாச அப்டேட்ஸ்!

அட்லீ-ஷாருக் படத்தில் ஏராளமான தமிழ் சினிமா பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 இசையமைப்பாளர்கள், கோலிவுட் பிரபலங்கள்.. அடுத்தடுத்து வெளியான அட்லீ-ஷாருக் பட அட்டகாச அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நான்கே படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவின் ப்ளாக் பஸ்டர் இயக்குநர்களின் ஒருவராக இருக்கிறார் அட்லீ குமார். விமர்சனங்களை புறந்தள்ளி தற்போது இந்தியளவில் பிரமாண்ட பட்ஜெட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானை இயக்கவிருக்கிறார் அட்லீ.

எப்போது படம் குறித்த தகவல்கள் வெளிவரும் என ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்திற்காக ஷாருக்கான் அட்லீக்கு 180 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷாருக் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படம் ராணுவம் தொடர்பான கதையாக இருக்கும் என்றும் படத்திற்கு தற்காலிகமாக ஜவான் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 இசையமைப்பாளர்கள், கோலிவுட் பிரபலங்கள்.. அடுத்தடுத்து வெளியான அட்லீ-ஷாருக் பட அட்டகாச அப்டேட்ஸ்!

அட்லீயை அடுத்து நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் காலெடுத்து வைத்திருக்கிறார். மேலும் அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தின் முதற்கட்ட படபிடிப்பு மகாராஷ்டிராவின் புனேவில் நேற்று தொடங்கியுள்ளது. அதில் பங்கேற்பதற்காக நயன்தாராவும், பிரியாமணியும் புனே விரைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், அட்லீ-ஷாருக் படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள் என்றும் அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கு அனிருத்தும் இசையமைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக படத்தில் இந்தி பிரபலங்களை விட கோலிவுட்டை சேர்ந்தவர்களே அதிகமாக நடிக்கவிருக்கிறார்களாம். இதுபோக தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களாம். புனேவை அடுத்து மும்பையில் உள்ள ஃபிலிம் சிட்டியில் படத்தின் படபிடிப்புகள் நடக்க இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories