சினிமா

மீண்டும் பிரச்னையில் சிக்கிய வடிவேலு? ’நாய் சேகர்’ படத்தின் தலைப்பால் கிளம்பிய புது சர்ச்சை!

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கப்போகும் முதல் படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

மீண்டும் பிரச்னையில் சிக்கிய வடிவேலு? ’நாய் சேகர்’ படத்தின் தலைப்பால் கிளம்பிய புது சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தில் ஷங்கர் - வடிவேலு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அடுத்தடுத்து தொடர்ந்து நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலுவே அறிவித்திருந்தார்.

இதுநாள் வரை மீம்ஸ்களில் உலா வந்துக்கொண்டிருந்த வடிவேலு மீண்டும் திரையில் தோன்ற இருக்கும் செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்கப்போகும் முதல் படத்திற்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அவரது பிரபல கதாபாத்திரமான ‘நாய் சேகர்’ தான் அந்த சிக்கல்.

சுந்தர் சி-ன் தலைநகரம் படத்தில் வடிவேலு நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கிய சுராஜ்தான் வடிவேலுவின் புதிய படத்தையும் இயக்கவிருக்கிறார். மேலும் அந்த படத்திற்கு ‘நாய் சேகர்’ என பெயரிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

மீண்டும் பிரச்னையில் சிக்கிய வடிவேலு? ’நாய் சேகர்’ படத்தின் தலைப்பால் கிளம்பிய புது சர்ச்சை!

ஆனால் அந்த தலைப்பில்தான் சிக்கல் மூண்டுள்ளது. அது என்னவெனில், ஏற்கெனவே காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்ற பெயரைதான் வைத்திருக்கிறது படக்குழு.

முன்னதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் படம் எடுக்க முடியாமல் போனதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

அந்த தலைப்பில்தான் சதீஷ் படம் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் வெளியே தெரிவிக்காததால் தற்போது வடிவேலுவின் கம்பேக் படத்துக்கு சிக்கல் வந்திருக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories