சினிமா

“இளவரசே, இன்னும் 6 நாட்களில் தென்மண்டலம் வந்தடைவோம்” : முழுசா வந்தியத்தேவனாகவே மாறிய கார்த்தி!

அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவிக்கு வந்தியத்தேவனாக பதிலளித்திருக்கிறார் கார்த்தி.

“இளவரசே, இன்னும் 6 நாட்களில் தென்மண்டலம் வந்தடைவோம்” : முழுசா வந்தியத்தேவனாகவே மாறிய கார்த்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம். இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இப்படத்தில் விக்ரம், ஜெயராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் நடைபெற்றது. அங்கு பெரும் அரண்மனைகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி இரண்டு பாகங்களுக்கும் தன்னுடைய பகுதியை நடித்து முடித்துவிட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு வந்தியத்தேவனாகவே மாறி பதிலளித்திருக்கிறார் கார்த்தி.

ட்விட்டரில் ஜெயம் ரவிக்கு பதிலளித்துள்ள கார்த்தி, "இளவரசே! நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்டை கதாபாத்திரம் பேசுவதுபோலவே வெளியிட்டிருக்கும் கார்த்தியின் ட்வீட்டை பலரும் ரசித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories