சினிமா

மீண்டும் பாலா-சூர்யா கூட்டணி... 'ஸ்டார்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதில் தனுஷ்? : சினிமா துளிகள்!

இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார்.

மீண்டும் பாலா-சூர்யா கூட்டணி...  'ஸ்டார்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதில் தனுஷ்? : சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூர்யா தயாரிப்பில் உருவாகவிருக்கும் பாலா படம்

பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மனமுடைந்த பாலா முழு வேகத்துடன் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஒரு படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க இருக்கிறார். சூர்யா தயாரிப்பில் தற்போது 4 படங்கள் உருவாகியுள்ளன.

இந்த 4 படங்களும் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் பாலா இயக்க உள்ள படத்தை சூர்யா தயாரிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பாலா-சூர்யா கூட்டணி...  'ஸ்டார்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதில் தனுஷ்? : சினிமா துளிகள்!

உக்ரைனில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், பிரியாமணி, ரம்யா கிருஷ்ணன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.

400 கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தை வரும் அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடலான நட்பு 5 மொழிகளில் வெளியாகி கவனமீர்த்தது. இந்நிலையில் அந்தப் பாடலின் காட்சிகள் இப்போது உக்ரைனில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மீண்டும் பாலா-சூர்யா கூட்டணி...  'ஸ்டார்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு பதில் தனுஷ்? : சினிமா துளிகள்!

தனுஷ் நடிக்கிறாரா?

‘பியார் பிரேமா காதல்’ படம் மூலமாக புதுமுக இயக்குனர் இளன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்திருந்தார். இதையடுத்து இதே கூட்டணியில் ‘ஸ்டார்’ என்ற திரைப்படம் தயாராவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதோடு அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி, கமல், ஷாருக்கான் ஆகியோரின் கெட்-அப்பில் ஹரிஷ் கல்யாண் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த ‘ஸ்டார்’ படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதே கதையில் ஹரிஷ் கல்யாணுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

banner

Related Stories

Related Stories