சினிமா

சூர்யா 40ல் கடைசி நேரத்தில் இணைந்த ராதிகா; தொடங்கியது கொரோனாவால் முடங்கிய பத்து தல ஷூட்டிங் - சினி பைட்ஸ்

சூர்யா 40ல் கடைசி நேரத்தில் இணைந்த ராதிகா; தொடங்கியது கொரோனாவால் முடங்கிய பத்து தல ஷூட்டிங் - சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பில் இணைந்த நடிகை ராதிகா..

சூர்யா நடிப்பில் தற்போது 3 படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர இன்னும் சில படங்களில் அவர் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில் சூர்யா நடிக்கும் 40வது படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘எதற்கும் துணிந்தவன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை பொள்ளாச்சியில் நடந்த நிகழுவுகள் போன்று பெண்களுக்கு எதிராக நடந்த சில உண்மையான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில், படத்தில் நடிகை ராதிகாவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை ராதிகா, சூர்யாவுடன் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் கார்த்திக்கை வைத்து துவங்கும் ‘பத்து தல’ ஷூட்டிங்...

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'மஃப்தி' இதன் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இந்தப் படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான இசை பதிவு வேலைகளை ஏ.ஆர்.ரஹ்மான் துவங்கி விட்ட நிலையில் படத்தின் ஷூட்டிங் வேலைகளை ராமேஸ்வரத்தில் கௌதம் கார்த்திக்கை வைத்து துவங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘காசேதான் கடவுளடா’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்...

R.கண்ணன் தற்போது ‘காசேதான் கடவுளடா’ படத்தை ரீமேக் செய்து வருகிறார். தமிழின் க்ளாசிக் திரைப்படமான , ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி அவர்களும் நடிக்கின்றனர். நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். கடந்த ஜூலை 16ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் 80சதவிதம் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories