சினிமா

பாலிவுட் செல்லும் நயன்? அட்லீ பட அடுத்த அப்டேட்; விஜய்க்கு பாட்டெழுதும் தனுஷ்? ரசிகர்கள் குதூகலம்!

பாலிவுட் செல்லும் நயன்? அட்லீ பட அடுத்த அப்டேட்; விஜய்க்கு பாட்டெழுதும் தனுஷ்? ரசிகர்கள் குதூகலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆகஸ்டில் துவங்கவிருக்கும் அட்லீ - ஷாரூக் ஷூட்டிங்..

அட்லீ இயக்கிய நான்கு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அவருக்கான அடுத்த படவாய்ப்பு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை இயக்க போதவதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பல தகவல்கள் இணையத்தில் வைரலானது, இந்திய அளவில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் விதமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங்கை இந்த ஆகஸ்ட் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஷாருக்கான் அட்லீக்கு 180 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் செல்லும் நயன்? அட்லீ பட அடுத்த அப்டேட்; விஜய்க்கு பாட்டெழுதும் தனுஷ்? ரசிகர்கள் குதூகலம்!

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யோடு இணையும் நடிகர் தனுஷ்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஜெக்டே நடிக்க இவர்களோடு சேர்ந்து செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பாடல் மற்றும் இசை பணிகளை கவனித்து வரும் அனிரூத் ஒரு பாடலுக்காக தனுஷை அனுகியதாகவும் தனுஷும் இதற்கு சம்மதம் சொல்லி விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுதி பாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலிவுட்டின் உச்ச நடிகர்கள் இருவர் இந்த படத்தில் இணைவதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories