சினிமா

ஆர்யா என நினைத்து Fake ID-யிடம் ₹70 லட்சத்தை பறிகொடுத்த ஜெர்மனி பெண்; சென்னை போலிஸ் அதிரடி ஆக்‌ஷன்!

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம்பறித்த மோசடி கும்பல் கைது.

ஆர்யா என நினைத்து Fake ID-யிடம் ₹70 லட்சத்தை பறிகொடுத்த ஜெர்மனி பெண்; சென்னை போலிஸ் அதிரடி ஆக்‌ஷன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம்பறித்த மோசடி கும்பல் கைது.

ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்யா என நினைத்து Fake ID-யிடம் ₹70 லட்சத்தை பறிகொடுத்த ஜெர்மனி பெண்; சென்னை போலிஸ் அதிரடி ஆக்‌ஷன்!
Jana Ni

விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் சமூக வலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்னிடம் பேசி வந்ததும், மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்ததும், மேற்படி குற்றசெயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

உதவி ஆணையாளர் ராகவேந்திரா K. ரவி தலைமையில் ஆய்வாளர் சுந்தர் மற்றும் தனிப்படையினர், குற்றவாளிகள் இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் 24.08.2021 ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மொபைல், போன்கள் 1, லேப்டாப், 1 ஐபேட் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு ட்படுத்தப்படுவார்கள்.

இந்த வழக்குத் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ”இதுவரை எனக்கு நேர்ந்திடாத மன உளைச்சல் இது. என்னை நம்பியவர்களுக்கு அன்பு கலந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories