சினிமா

பாராட்டு மழையில் 'நெற்றிக்கண்' படக்குழு... 'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக 500 கி.மீ கடந்துவந்த காமெடி நடிகர்!

'பீஸ்ட்' படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக 500 கிலோ மீட்டர் கடந்து வந்தார் நடிகர் யோகிபாபு.

பாராட்டு மழையில் 'நெற்றிக்கண்' படக்குழு... 'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக 500 கி.மீ கடந்துவந்த காமெடி நடிகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்க்காக 500 கிலோமீட்டர் கடந்துவந்த யோகிபாபு!

தமிழ் சினிமாவில் ரொம்ப பிஸியான நடிகராக இருந்து வருகிறார் யோகிபாபு. முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கும் யோகிபாபு தற்போது ஏராளமான படங்களைத் தன்வசம் வைத்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஷூட்டிங் நடந்து வரும் அருண்விஜய் படத்தில் நடித்துவரும் இவர் அங்கிருந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்க 500 கிமீ கடந்து வந்து சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

பாராட்டு மழையில் 'நெற்றிக்கண்' படக்குழு... 'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக 500 கி.மீ கடந்துவந்த காமெடி நடிகர்!

ரசிகர்களின் பாராட்டு மழையில் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’

அவள் படத்தின் இயக்குனர் மிலன் ராவ் இயக்கத்தில் நாயகி நயன்தாரா நடிப்பில் வெளியாகிருக்கும் படம் ‘நெற்றிக்கண்’. டைரக்டர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிருக்கும் இந்த படம் பிரபல கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். கொரியாவில் பெரிய ஹிட்டான இந்தப் படம் அதன்பின் சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் ரீமேக்காகியுள்ளது. தற்போது தமிழில் ‘நெற்றிக்கண்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளில் கிடைத்ததைப் போலவே தமிழிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories