சினிமா

பிரபாஸை அடுத்து Pan India நாயகனாகும் தென்னிந்திய நடிகர்; ஃபேமிலி மேன் இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி!

டிஜிட்டல் தளம் மூலம் ஹிந்திக்கு செல்லவிருக்கும் விஜய் சேதுபதி; ஹிந்தி சினிமாவிற்கு விஜய் சேதுபதியை வரவேற்கும் ராஷி கண்ணா.

பிரபாஸை அடுத்து Pan India நாயகனாகும் தென்னிந்திய நடிகர்; ஃபேமிலி மேன் இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிஜிட்டல் தளங்களும் வெப் தொடர்களும்தான் இந்த கொரோனா காலத்தில் அதிகப்படியான லாபத்தை பார்த்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே பொழுதைக் கழிக்க பெரிதும் உதவும் இவைகளை மக்கள் தங்களின் அன்றாட தேவையாக்கியுள்ளனர்.

வெப் தொடர்களின் வரவேற்பு திரைப்படங்களை தாண்டி இருப்பதால் பெரும்பாலான இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இவைகள் மீது தங்களின் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அமேசான் ப்ரைமில் வெளியான ஃபேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இவர்களின் அடுத்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளார்.

இதில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் நடிகை ராஷி கண்ணா நாயகியாக நடித்து வரும் நிலையில் அவர் விஜய் சேதுபதியை ஹிந்திக்கு வரவேற்று செய்த ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் தமிழில் இரண்டு படங்கள் நடித்துள்ள ராஷிக் கண்ணா மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories