சினிமா

பொங்கல் ரேஸில் இணைந்த பிரபாஸின் பிரம்மாண்ட ராதே ஷ்யாம்.. மீண்டும் OTTல் ரிலீசாகும் நயன்தாராவின் படம் !

பொங்கல் ரேஸில் இணைந்த பிரபாஸின் பிரம்மாண்ட ராதே ஷ்யாம்.. மீண்டும் OTTல் ரிலீசாகும் நயன்தாராவின் படம் !
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் காதல் திரைப்படம் தான் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் 1970களில் யூரோப்பில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகி வருகிறது. முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

பொங்கல் ரேஸில் இணைந்த பிரபாஸின் பிரம்மாண்ட ராதே ஷ்யாம்.. மீண்டும் OTTல் ரிலீசாகும் நயன்தாராவின் படம் !

த நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது, அதன்படி ராதே ஷ்யாம் படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்சியான விடுமுறை தினங்களை கொண்டதால் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய சில முக்கிய படங்களும் பொங்கல் வெளியீட்டை குறி வைத்துள்ளதால் இந்த பொங்கல் திரையங்குகள் நிறைந்து காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய மொழி உச்ச நடிகர்களின் படங்களிலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வரும் நயன்தாரா கைவசம் ‘நெற்றிக்கண்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘அவள்’ பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் இவர் சோலோ நாயகியாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த படம் ஸ்ட்ரீமாகவுள்ளது. இதனிடையே படத்தின் ட்ரைலரை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிக்க செய்துள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம். படம் நல்ல த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories