சினிமா

”சார்ப்பட்டா பார்த்தேன்; இதுதான் வருத்தமாக இருக்கிறது” - பிரபல இயக்குநர் கருத்து!

அமேசான் பிரைமில் வெளியாகி கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக உருமாறி இருக்கிறது சார்பட்டா பரம்பரை படம்.

”சார்ப்பட்டா பார்த்தேன்; இதுதான் வருத்தமாக இருக்கிறது” - பிரபல இயக்குநர் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்ட பரம்பரை படத்துக்கு திரையுலக பிரபங்களிடம் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.

அட்டக்கத்தி, மெட்ரா, கபாலி, காலா என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சார்பட்ட பரம்பரை.

குத்துச்சண்டையை கதையின் கருவாக வைத்து 75களின் பிற்பகுதியில் நடைபெறும் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். இரண்டு குத்துச்சண்டை குழுக்களிடையே நடைபெறும் பகைமையை சுட்டுவதுதான் படமாக அமைந்திருக்கிறது.

அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டு மழையை பொழிந்துத் தள்ளியிருக்கிறார்கள்.

அதேபோல திரையுலகினரும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கேற்ப பா ரஞ்சித்துக்கும் சார்பட்டா பரம்பரை படக்குழுவுக்கும் பாராட்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

அவ்வகையில் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் மாரி செல்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் சுசீந்திரனின் பதிவில் “இப்படியொரு திரைப்படத்தை திரையரங்கள் காணமுடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. இந்திய சினிமாவுக்கு மிகச் சிறந்த படத்தை பா ரஞ்சித் கொடுத்துள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல மாரி செல்வராஜும் “ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார்” என பா.ரஞ்சித்தை புகழ்ந்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories