சினிமா

தெலுங்கு 'ராட்சசன் 2'-நாயகன் இவரா?... தனுசுக்கு தம்பியாகும் பிரபல நடிகர்! #CINEUPDATES

தெலுக்குல் உருவாகும் ‘ராட்சசன் 2’ படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு 'ராட்சசன் 2'-நாயகன் இவரா?... தனுசுக்கு  தம்பியாகும் பிரபல நடிகர்! #CINEUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கில் உருவாகவிருக்கும் ‘ராட்சசுடு 2’ ...

‘ராட்சசன்’ படத்தை ‘ராட்சசுடு’ எனும் தலைப்பில் தெலுங்கில் ரமேஷ் வர்மா ரீமேக் செய்திருந்தார். பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸும், அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருந்தனர். சத்யநாராயண கொனரு படத்தைத் தயாரித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ‘ராட்சசுடு 2’ எனும் தலைப்பில் உருவாகவுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த பாகத்தின் நடிகர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் படத்தின் ஹீரோ குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ரமேஷ் வர்மா, ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம். இவர் சமீபத்தில் சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியுள்ளார். அதுனால் ‘ராட்சசுடு 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என தகவல்கள் வருகிறது. ஏற்கனவே தமிழ் தெலுங்கு என அடுக்கடுக்காக படங்கள் ஒப்பந்தமாகிவரும் விஜய் சேதுபதி இந்த த்ரில்லர் படத்திலும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு 'ராட்சசன் 2'-நாயகன் இவரா?... தனுசுக்கு  தம்பியாகும் பிரபல நடிகர்! #CINEUPDATES

தனுஷுக்கு தம்பியாக நடிக்கும் விஷ்ணு விஷால்!

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் பத்து வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்று தயாராக உள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘நானே வருவேன்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளது.

இதற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்திற்கான கதை இராயபுரத்தில் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் தனுஷுக்கு தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அது தனுஷின் பிறந்த நாளான வரும் 28ஆம் தேதி வெளியாகளாம் எனவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories