சினிமா

த்ரிஷ்யம் காம்போ படத்தில் இணையும் 12 முக்கிய நடிகர்கள்; சமுத்திரகனியை அமோகமாக வரவேற்கும் டோலிவுட்!

த்ரிஷ்யம் காம்போ படத்தில் இணையும் 12 முக்கிய நடிகர்கள்; சமுத்திரகனியை அமோகமாக வரவேற்கும் டோலிவுட்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோகன்லால் படத்தில் இணையும் 12 முக்கிய நடிகர்கள்..

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷயம் 2’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுது. இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் கூட்டணி மீண்டும் ஒரு படத்துக்கு இணைய உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. ‘12த் மேன்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து படத்தின் நடிகர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 12 பேர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். அதன்படி அதிதி ரவி, அனுஸ்ரீ, பிரியங்கா நாயர், வீனா நந்தகுமார், லியொனா லிஷாய், ஷிவதா ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் என்றும் மோகன்லால், சய்ஜு குருப், அனு மோகன், சந்துரு நாத் ஆகியோர் முக்கிய ஆண் கதாப்பாத்திரங்களாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 12 கேரக்டர்களை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை நகரவிருக்கிறது. ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பாக ஆண்டனி பெரும்பவூர் தயாரிக்கவிருக்கும் இந்த படம் நல்ல சஸ்பன்ஸ் த்ரில்லர் கதையம்கொண்ட படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமுத்திரகனிக்கு தெலுங்கில் கிடைக்கும் பெரும் வரவேற்பு...

சமுத்திரகனி நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் மக்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்கும் படமா தான் இருக்கும். தமிழை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜுனின்‘அல வைகுந்தப்புரமலோ’ படம் மூலமாக வில்லனாக எண்ட்ரியானா இவருக்கு முதல் படமே அங்கு பெரிய மார்கெட்டை உருவாக்கியது அதனை தொடர்ந்து ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘கிராக்’ படத்திலும் சமுத்திரகனி வில்லானாக கலக்கிருந்தார்.

த்ரிஷ்யம் காம்போ படத்தில் இணையும் 12 முக்கிய நடிகர்கள்; சமுத்திரகனியை அமோகமாக வரவேற்கும் டோலிவுட்!
DELL

தற்போது ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திலும் ஆகாசவாணி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர மகேஷ் பாபு லீட் ரோலில் நடித்து வரும் ‘சர்காரு வாரிபாட்ட’ படத்திலும் முக்கிய கேரக்டரில் இவர் நடிப்பதாக பரவலாக சொல்லப்படுகிறது. இந்த படங்களின் ரிலீஸுக்கு பிறகு அவரின் மார்கெட் மேலும் தெலுங்கில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நவரச முதல் சிங்கிள் வெளியானது..

சினிமா ஆளுமைகள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் "நவரசா" ஆந்தாலஜி படத்திலிருந்து, அழகான முதல் பாடலை வெளியிட்டிருக்கிறது திங்க் மியூசிக் நிறுவனம். இப்பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. "தூரிகா" எனும் மென் மெலடி காதல் பாடலான, இப்பாடலுக்கு இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்துள்ளார். பிரபல கவிஞர் மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், காதல் ரசத்தில் உருவாகியிருக்கும் "கிடார் கம்பியின் மேலே நின்று" படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories