சினிமா

இந்தியில் ‘யூ-டர்ன்’ - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.. ‘ஓ பேபி’ இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்! #CineUpdates

இந்தி ரீமேக் ‘யூ-டர்ன்’ படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியில் ‘யூ-டர்ன்’ - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.. ‘ஓ பேபி’ இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘யூ-டர்ன்’ ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

2016ல் வெளியான கன்னடப் படம் ‘யூ-டர்ன்’. இந்தப் படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமாகிருந்தார் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான ஹீரோயினாக நடித்துவருகிறார். இந்தப் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதன் இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ‘யூ-டர்ன்’ இந்தி வெர்ஷன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை ஷ்ரத்தா கபூர் மற்றும் ஏக்தா கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஆரிஃப் கான் எனும் புதுமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இதில் அறிமுக நாயகி அலயா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியில் ‘யூ-டர்ன்’ - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.. ‘ஓ பேபி’ இயக்குநரின் அடுத்த புராஜெக்ட்! #CineUpdates

‘ஓ பேபி’ பட இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி பெரிய ஹிட்டான படம் ‘ஓ பேபி’. இந்தப் படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ‘மிஸ் கிரானி’ எனும் தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த ‘ஓ பேபி’.

இந்தப் படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தனது அடுத்த படமும் ஒரு கொரியன் படத்தின் ரீமேக் தான் என கடந்த ஆண்டே கூறிருந்த நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அன்னி மன்ச்சி சகுனமுலெ’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இதில் நாயகனாக சந்தோஷ் ஷோபன் நடிக்க நாயகியாக மாளவிகா நாயர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் வெண்ணிலா கிஷோர், ராவ் ரமேஷ், நரேஷ், ராஜேந்திர பிரசாத் மற்றும் கௌதமி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories