சினிமா

இளம் நடிகருக்கு வில்லனாகும் மம்மூட்டி.. மீண்டும் இணைந்த காமெடி கூட்டணி: சினிமா துளிகள்!

நடிகர் மம்மூட்டி இளம் வாரிசு நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இளம் நடிகருக்கு வில்லனாகும் மம்மூட்டி.. மீண்டும் இணைந்த காமெடி கூட்டணி: சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இளம் வாரிசு நடிகருக்கு வில்லனாகவிருக்கும் மலையாள முன்னணி நடிகர்!

தென்னிந்திய சினிமா நடிகர்களில் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மம்மூட்டி. 69 வயதை எட்டியிருக்கும் மம்மூட்டி அவரின் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடித்து இன்றும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் பலரும் வில்லனாக நடித்து வருகின்றனர்.

அந்தவகையில் மம்மூட்டியும் ஒரு இளம் நடிகருக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கு வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

டோலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் கை சற்று ஓங்கியே இருக்கும் இதன் காரணமே தன் மகனை பெரிய ஹீரோவாக மாற்ற அவருக்கு முன்னணி நடிகர்களை வில்லனாக்க தனது நட்பை பயன்படுத்தி மம்மூட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நாகார்ஜுனா.

இளம் நடிகருக்கு வில்லனாகும் மம்மூட்டி.. மீண்டும் இணைந்த காமெடி கூட்டணி: சினிமா துளிகள்!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் இணையவிருக்கு மிர்ச்சி சிவா, யோகி பாபு!

கோலிவுட்டில் இயக்குனரும், தயாரிப்பாளருமாக இருந்து வரும் ஆர். கண்ணன் தற்போது தள்ளிப்போகாதே மற்றும் எரியும் கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தநிலையில் ஆர்.கண்ணன் அடுத்து இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் காமெடி காம்போவான மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணையவுள்ளனர்.

காமெடி கலாட்டா நிறைந்த படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் வேலைகள் விரைவில் துவங்க உள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மிர்ச்சி சிவாவுக்கு அடுத்து ‘இடியட்’, ‘சுமோ’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories