சினிமா

‘அண்ணாத்த’ பட ரிலீஸ் - தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!

தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியோகும் என போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ பட ரிலீஸ் - தேதியுடன் புதிய போஸ்டர் வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் ரஜினியோடு சேர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராப், ஜகபதி பாபு என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் எல்லாரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories