சினிமா

குறும்படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்... அறிவு, யுவன் கூட்டணியில் Don’t Touch Me பாடல் : சினி அப்டேட்ஸ்!

ரசிகர் ஒருவரின் கேள்விக்கு குறும்படம் எடுக்கப் போவதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவத்துள்ளார்.

குறும்படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்... அறிவு, யுவன் கூட்டணியில் Don’t Touch Me பாடல் : சினி அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் தற்போதைய சூழலில் சினிமா பிரியர்களுக்கு டிஜிட்டல் தளங்களே பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இதனால் இயக்குனர்கள் பலரும் டிஜிட்டல் தளங்களுக்கு படமியக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த டிசம்பரில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி வெப் சீரிஸ் தான் ‘பாவக் கதைகள்’. நான்கு குறும்படங்களின் ஒரு தொகுப்பாக வந்த இந்த வெப் சீரிஸில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படம் தான் ‘லவ் பண்ணா உட்றணும்’. இந்தக் கதையில் நடிகை அஞ்சலி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் விக்னேஷ் சிவன், அதில் ரசிகர் ஒருவர் அடுத்த குறும்படம் எப்போது என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘லவ் பண்ணா உட்றணும்’ சீக்குவல் எடுக்க முயற்சி செய்துகொண்டிருப்பதாக பதிலளித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குறும்படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்... அறிவு, யுவன் கூட்டணியில் Don’t Touch Me பாடல் : சினி அப்டேட்ஸ்!

ஆஸ்தான இயக்குனர் படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா..?

‘மாமனிதன்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - சீனுராமசாமி ஐந்தாவது முறையாக இணையவுள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தை இயக்குனர் சீனுராமசாமி முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளார்.

அதாவது தயாரிப்பாளரான தாணு படத்திற்கான பட்ஜெட்டை இயக்குனர் சீனுராமசாமியிடம் கொடுத்துவிடுவார், அந்த பட்ஜெட்டுகுள் இயக்குனர் இந்தப் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும். அதன்படி தாணு இவரிடம் 20 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளார், அந்த 20 கோடிக்குள் விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் படக்குழுவிற்குமான சம்பளம், தயாரிப்பு செலவு என அனைத்தையும் சீனு கொடுக்க வேண்டும்.

இதுதான் இவர்களின் திட்டம், ஆனால் விஜய் சேதுபதியின் சம்மளமே இதில் 10 கோடி என கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. மீதமுள்ள பணத்தில் திட்டமிட்டபடி படத்தை சீனு ராமசாமியால் முடிக்கமுடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

குறும்படம் எடுக்கும் விக்னேஷ் சிவன்... அறிவு, யுவன் கூட்டணியில் Don’t Touch Me பாடல் : சினி அப்டேட்ஸ்!

தெருக்குரல் அறிவும் யுவனும் இணைந்து பாடிய ‘Dont Touch Me’...

‘குக்கூ குக்கூ’ என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்த பாடல் தான் ‘என்ஜாய் எஞ்சாமி’. ராப் பாடல் வகையைச் சேர்ந்த இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு சேர்ந்து பாடியிருந்தனர். இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இந்த பாடல் உலகத்தின் மூலைமுடுக்கிற்கும் சென்று வைரலாகியிருந்தது.

இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெருக்குரல் அறிவு யுவனுடன் கூட்டணி அமைத்துள்ளார், ‘Dont Touch Me’ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யுவன் தனது யு1 ரெக்கார்ட்ஸ் மூலமாகத் தயாரித்துள்ளார். வரும் ஜூன் 26ம் தேதி இந்த பாடல் வெளியாகவிருக்கிறது, இது சம்மந்தமான அறிவிப்பையும் யுவன் ஷங்கர் ராஜ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories