சினிமா

தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ‘ரௌடி பேபி’..? - மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்காக பேச்சுவார்த்தை!

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தனுஷுடன் மீண்டும் இணைகிறாரா ‘ரௌடி பேபி’..? - மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்காக பேச்சுவார்த்தை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து தனுஷ், அவரின் 43வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகள் முடிந்து ஷூட்டிங் செல்ல படக்குழு தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கர்ணன்’ பட இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இதுதவிர ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமாருடன் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் 2 படம் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

பல படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளது, இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான ‘மாரி 2’ படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்திருந்தாலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ், அதனால் இந்த காம்போ மீண்டும் இணையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories