சினிமா

OTT-யில் வெளியிடும் முடிவை கைவிட்ட படக்குழு : திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா அருண் விஜய்யின் 'பார்டர்'?

அருண் விஜய்யின் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு குழப்பத்தில் உள்ளது.

OTT-யில் வெளியிடும் முடிவை கைவிட்ட படக்குழு : திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறதா அருண் விஜய்யின் 'பார்டர்'?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘குற்றம் 23’ படத்தை தொடர்ந்து அருண் விஜய் மீண்டும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம்தான் ‘பார்டர்’. இந்தப் படத்தை 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இன்னொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார், இந்தப் படத்தின் கதை எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய ‘மாயவலை’ எனும் புத்தகத்தின் கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால், ஜூலை மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பார்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories