சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரணுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை... PBS ரசிகர்கள் ஏமாற்றம்!

இயக்குனர் ஷங்கர் படத்தில், ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கியாரா அத்வானி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரணுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை... PBS ரசிகர்கள் ஏமாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குனர் ஷங்கர் கைவசம் தற்போது ‘இந்தியன் 2’, ராம்சரணின் 15வது படம், அந்நியன் ஹிந்தி ரீமேக் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில் ராம்சரணின் 15வது படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, மேலும் பிரபல சௌத் கொரியன் நாயகி பே சுசி இதில் ஒப்பந்தமாகியுள்ளார், இவரை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒப்பந்தமானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, பின்னர் மாளவிகா மோகனன் அல்லது பிரியா பவானி சங்கர் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

இவர்களில் ஒருவர் இந்தப் படத்தில் நிச்சயம் இணைவார்கள் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பாலிவுட் நாயகி கியாரா அத்வானி இதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த மாதம் கியாராவின் பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் 2022 துவக்கத்திலிருந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories