சினிமா

மனதிற்கு ஆறுதல் அளிக்கும் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல்.. நெட்டிசன்கள் மத்தியில் குவியும் பாராட்டு!

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் “இதுவும் கடந்து போகும்” என்ற பாடலை சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

மனதிற்கு ஆறுதல் அளிக்கும் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல்..  நெட்டிசன்கள் மத்தியில் குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அவள் படத்திற்கு பிறகு மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நெற்றிக்கண். இதில் லீட் ரோலில் நடிக்கும் நயன்தாரா, முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியானது. இந்தப் படம் `ப்ளைன்ட்' என்கிற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது இருக்கு.

நெற்றிக்கண் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழல் காரணமாக ஓடிடியில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. இதில் நயன்தாராவுக்கு ஜோடியாக அஜ்மல் நடித்திருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு க்ரிஷ் இசையமைத்திருக்கிறார். இந்தநிலையில, படத்தில் இருந்து முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

‘இதுவும் கடந்து போகும்’ என்ற இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார். சித் ஸ்ரீராம் பாடலை பாடியிருக்கார். ஆல்ரெடி இதனுடைய சின்ன டீசர், பாடகர் சித் ஸ்ரீராம் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது முழு பாடலையும் இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கும் வகையில், நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் “இதுவும் கடந்து போகும்” என்ற பாடல் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories