சினிமா

முடிவுக்கு வந்த லைகா - ஷங்கர் பிரச்சனை? : ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியன் 2 படபிடிப்பு துவக்கம் !

ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு வேலைகள் தொடங்குகிறது.

முடிவுக்கு வந்த லைகா - ஷங்கர் பிரச்சனை? : ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியன் 2 படபிடிப்பு துவக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்துல உருவாகிட்டு வர்ற படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நிற்கிறது. அதாவது, போன வருடம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு படப்பிடிப்பு ஏதும் நடக்கவே இல்லை. லைகா நிறுவனமும் படத்தைத் தொடங்குவது பற்றி பேசவில்லை.

ஷங்கர் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என தயாரிப்புத் தரப்பிடம் பல முறை கேட்டும் பதில் இல்லாததால், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமானார் ஷங்கர். ஒன்னு, ராம்சரண் நடிக்க தில்ராஜு தயாரிப்பில் PAN இந்தியா திரைப்படம். இன்னொன்று அந்நியன் படத்தின் இந்தி ரீமேக். இவ்விரண்டு படங்களையும் உடனடியாகத் தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்த நேரத்தில், லைகா சுதாரித்து, நேராடியாக கோர்ட்டுக்கு போனது. இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துட்டு , மற்ற படங்களை இயக்கட்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றமும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க என சொன்னது. இந்த வழக்குக்கான தீர்ப்பு இந்த மாதம் வர இருக்கிறது. ஆனால், தீர்ப்பு வருவதற்கு முன்பே, சிக்கல் தீர்ந்துவிடும் என தெரிகிறது. இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட முடிவெடுத்திருக்கிறாராம் ஷங்கர். ஏன் என்றால், ராம்சரண் படமும், அந்நியன் இந்தி ரீமேக்கும் தள்ளிப்போகும் சூழல் இருக்கிறது. அதனால், லைகாவுக்காக முதலில் இந்தியன் 2 முடித்துவிட சம்மதம் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால, லாக்டவுன் முடிந்து, படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுது.

banner

Related Stories

Related Stories