சினிமா

கீர்த்தி சுரேஷின் 'குட்லக் சகி' ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறதா? : படக்குழு விளக்கம்!

‘குட்லக் சகி’ படம் ஓடிடியில் வெளியாவதாக வரும் தகவல் உண்மையில்லை என படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் 'குட்லக் சகி' ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறதா? : படக்குழு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ், தெலுங்கு, மலையாளம் இப்படி பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் உருவான பென்குயின், மிஸ் இந்தியா ஆகிய இரண்டு படங்களும் ஏற்கெனவே நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகின. இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் இன்னொரு படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக பேசப்பட்டது.

கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் `குட்லக் சகி' படம் தான் அது. இந்தப் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகப் போகிறது என ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதைப்பற்றி `குட்லக் சகி' படக்குழு முழுமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

அதில் "குட்லக் சகி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதாகப் பரவும் தகவல் உண்மையில்லை. சீக்கிரம் அப்டேட் தருகிறோம். எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக ஓடிடி ரிலீஸ் பற்றிய வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories