சினிமா

கமல் - மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

கமல் மற்றும் மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்.

கமல் - மகேஷ்பாபுவை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகுபலி, கேஜிஎஃப், 2.O, மாஸ்டர் மாதிரியான தென்னிந்திய படங்கள் பாலிவுட் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை படைத்தது. அதனால் தென்னிந்திய மெகா ஸ்டார்கள் ஒன்றாக இணைந்து எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், கமல்ஹாசன், மகேஷ் பாபு இணையும் ஒரு பிரம்மாண்ட படம் பேன் இந்தியன் படமாக ரெடியாக இருக்கிறது. இந்த புதுப் படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை, கமர்ஷியல் படங்களை எடுக்குப்பதில் கைதேர்ந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.

இந்தப் படம் பற்றி வந்திருக்கும் தகவல் என்ன என்றால், இந்தப் படத்துடைய வேலைகள் ரொம்ப ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறதாம். இப்போது இருக்கும் கொரோனா சூழல், இரண்டு நடிகர்களுடைய நெருக்கடியான பட வேலைகள் காரணமாக இந்த படம் தாமதமாகும் சூழல் இருக்கிறதாம்.

மகேஷ்பாபு இப்போ பரசுராம் இயக்கும் சர்காவு வாரி பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப்பக்கம் இந்தியன் 2, பாபநாசம் 2, லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் இப்படி கமலுக்கும் ஒரு லிஸ்ட் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தான் இந்த ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கான வேலைகள் நடக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories