சினிமா

‘மாஸ்டர்’ இயக்குநரின் ரீமேக் படத்தில் இணையும் காஜல் அகர்வால்? - பேச்சுவார்த்தையில் லோகேஷ் கனகராஜ் !

'கைதி' ரீமேக்கில் நடிக்க காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 ‘மாஸ்டர்’ இயக்குநரின் ரீமேக் படத்தில் இணையும் காஜல் அகர்வால்? - பேச்சுவார்த்தையில் லோகேஷ் கனகராஜ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் பிரம்மாண்ட வெற்றிய பெற்றது. இந்த படம் கார்த்தியுடைய சினிமா வாழ்க்கையிலேயே மைல்கல்லாக அமைந்தது. கூடவே பாடல்கள் இல்லாமல் ஹீரோயின் இல்லாமல் ஒரு படத்தை சுவாரஸ்யமாக ரசிகர்களுக்கு கொடுத்திருந்தனர்.

த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்ட கைதி பிரம்மாண்ட வெற்றியடைந்ததை அடுத்து, சமீபத்தில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவானது. அதற்கான அறிவிப்பு கூட வெளியானது. இந்தி ரீமேக்கில் கார்த்தி நடித்த ரோலில் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார்.

ஒரிஜினல் கதையில் ஒரு பிளாஷ்பேக் வைத்து, ஹீரோயின் வருவது போல காட்சிகள் வைக்க இருக்கிறார்களாம். இதில் அஜய் தேவ்கனின் மனைவியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இந்தி ரசிகர்களோட ரசனைக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

banner

Related Stories

Related Stories