சினிமா

'கே.ஜி.எஃப் -2' ஜூலையில் வெளியாகாது : OTT ரிலீஸுக்கு வாய்ப்பு இருக்கிறதா? - படக்குழுவின் முடிவு என்ன?

அக்டோபர் மாதம் கே.ஜி.எஃப் 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கே.ஜி.எஃப் -2' ஜூலையில் வெளியாகாது : OTT ரிலீஸுக்கு வாய்ப்பு இருக்கிறதா? - படக்குழுவின் முடிவு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கே.ஜி.எஃப்'. நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய இந்திய மொழி ரசிகர்கள் மத்தியிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதில் மெயின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எண்ட்ரியாக இருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டுள்ளது படக்குழு. ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் எதிப்பார்ப்பை பூர்த்திசெய்யும், விதமாக இந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை அந்த டீசர் கொடுத்தது. அதைத் தொடர்ந்து படம் வரும் ஜூலை 16ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போது ரிலீஸ் அக்டோபருக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் காட்டி வருவதால் ஜூலை ரிலீஸ் சாத்தியம் இல்லை எனப் படக்குழு யோசிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ரிலீஸ் சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சீக்கிரமே படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories