சினிமா

90s கிட்ஸ்களின் பிடித்தமான Friends சீரிஸின் Re-Union டீசர் வெளியானது!

90s கிட்ஸ்களின் பிடித்தமான Friends சீரிஸின் Re-Union டீசர் வெளியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப் சீரிஸெல்லாம் பிரபலமாக ஆரம்பித்தது, இந்த லாக்டவுன், கொரோனா காலகட்டத்தில் தான் என்றே சொல்லலாம். ஆனால், இதற்கெல்லாம் முன்பே பலரும் வெப் சீரிஸ்களை ரசித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அப்படி ஒரு பெரும் கூட்டத்தால் கொண்டாடப்பட்ட, இப்போவும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சீரிஸ், `ஃப்ரெண்ட்ஸ்'. David Crane - Marta Kauffman சேர்ந்து உருவாக்கிய இந்த சீரிஸ் தொலைக்காட்சியில ஓளிப்பரப்பாகி, இப்போது நெட்ஃப்ளிக்ஸிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இதுவரை பத்து சீசன்களாகவும், 236 எப்பிசோட்களாகவும் வெளி வந்திருக்கிறது. 2004ல் நிறுத்தப்பட்ட இந்த சீரிஸ் பற்றி அடிக்கடி பலரும் சமூக வலைதளங்களில் எழுதுவம், அதில் இருந்து டெம்ப்ளேட் ஷேர் ஆவதையும் பாக்க முடியும்.

இப்போது இந்த சீரிஸில் நடிக்கும் முக்கியமான ஆறு கதாபாத்திரங்களை திரும்பவும் அழைத்து வந்து ஒரு ரீயூனியன் எப்பிசோட் எடுக்கப்பட்டிருக்கிறது.

இது போன வருடம் மே மாதமே ஒளிப்பரப்பாக வேண்டியது, ஆனால், கொரோனா காரணமாக நடக்கவில்லை. இப்போது வரும் 27ம் தேதி இந்த ரீ-யுனியன் எப்பிசோட், ஹெ.பி.ஓ மேக்ஸில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான ஒரு டீசரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories