சினிமா

சந்தோஷ் நாராயணன் எழுத்தில் ஹோம் மேட் குறும்படம்; விஜய் 65ல் இணையும் ஷேன் நிகம்? - சினி பைட்ஸ்

சந்தோஷ் நாராயணன் எழுத்தில் ஹோம் மேட் குறும்படம்; விஜய் 65ல் இணையும் ஷேன் நிகம்? - சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தோட முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்து, சென்னையில் துவங்கியது. பூஜா ஹெக்டே இதில் ஹீரோயினாக நடிக்கிறார். யோகிபாபுவும் இந்தப் படத்தில் நடிக்கிறர். சன்பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னையில மிகப்பெரிய ஷாப்பிங் மால் செட் அமைத்து அதில்தான் ஷூட் நடந்துகொண்டிருந்தது, இப்போது கொரோனா காரணமா ஷூட் ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.

இப்போ இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஒருவர் கமிட்டாகியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட். ஷேன் தாமஸ் சாக்கோ, மலையாளத்தில் பல பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த `இஷ்க்' படத்தில் அவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் அவருடைய `லவ்' படம் ரிலீஸ் ஆனது. இவர் இப்போது விஜய் 65ல் நடிக்கிறார். இதைப் பற்றி அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதுதான் முதல் முறை அவர் மலையாளம் தாண்டி இன்னொரு மொழியில நடிப்பது. இதற்காக சென்னை வந்து படத்திற்கான டிஸ்கஷனில் இருக்கிறார் ஷேன். "இன்னும் எனக்கு தமிழ் சரளமா பேச வராது. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டிருக்கேன். சில வார்த்தைகள் புரியல. ஆனா, தமிழ்ல பேட்டிகள் படங்கள் எல்லாம் பாத்து கத்துகிட்டிருக்கேன்" என இப்போ முழுக்க தமிழ் கற்பதில் தீவிரமாக இருக்கார். படத்தின் அடுத்த ஷெட்யூல் துவங்கியதும் அதில் ஷேனும் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

இந்த கொரோனா காலம் பலருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் இதே கொரோனா பலரை க்ரியேட்டிவாக பல வேலைகள் செய்யவும் உந்தித் தள்ளுகிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அப்படி ஒருவர் தன்னுடைய வீட்டுகுள்ளேயே வைத்து ஒரு ஹோம் மேட் குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

ஓவியர், எழுத்தாளர், புத்தக அட்டை - போஸ்டர் வடிவமைப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் தயாரிப்பில் ஃப்ராங்க்ளின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரைட்டர்'. சமுத்திரக்கனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணனும் எழுத்தாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

இந்த கொரோனா காலத்தில் விளையாட்டாக எடுக்க ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு ஓடும் குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். சைன்ஸ் - ஃபிக்ஷன் ஜானரில் உருவாகியிருக்கும் இதன் போஸ்டரை சுஜாதாவின் பிறந்தநாளன்று வெளியிட்டிருந்தார் சந்தோஷ். `ட்யூன்' என்ற இந்தக் குறும்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. விரைவில் முழுக் குறும்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க வீட்டுக்குள்ளேயே வைத்து ஹோம் மேட் குறும்படமாக உருவாகியிருக்கிறது. இந்தக் குறும்படத்தில் நடித்திருக்கும் காயம்பூ - அபிநந்தன் இந்த இருவரும் ஏற்கெனவே கொரோனா குறித்த ஒரு அனிமேஷன் குறும்படத்தை உருவாக்கியவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது. `Learn to live with corona' என்ற அந்த அனிமேஷன் குறும்படம் ஜெர்மனியின் Munich Film Festivalலின் பகுதியான Unifiedfilmmakers Festivalல் திரையிட தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா நெருக்கடி காலத்தை க்ரியேட்டிவாக கையாளும் சந்தோஷ் குடும்பத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories