சினிமா

OTT-யில் வெளிவருகிறதா சிவாவின் ‘சுமோ’... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

'சுமோ’ படத்தில் சிவாவுடன் ப்ரியா ஆனந்தும், ஜப்பானைச் சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro நடித்திருக்கிறார்கள்.

OTT-யில் வெளிவருகிறதா சிவாவின் ‘சுமோ’... அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

`தமிழ்ப்படம்' மூலம் அகில உலக சூப்பர்ஸ்டாராக சினிமாவில் அறிமுகமானவர் சிவா. இவரது நகைச்சுவை பாணியிலான நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதனாலேயே, இவர் நடித்த கலகலப்பு, வணக்கம் சென்னை, தமிழ்ப்படம் 2 ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக தொடர்ந்து வரவேற்பைப் பெற்றார். இப்போது இவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படம் `சுமோ'.

பரத் நடித்த `பிப்ரவரி 14', சாந்தனு - சத்யராஜ் நடித்த `ஆயிரம் விளக்கு' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சுமோ’ படம் ரஜினியுடைய தர்பார் படத்துடன் ரிலீஸாக இருந்தது. ஆனால் பிறகு அந்த படத்துடன் வெளிவராமல் பின்வாங்கியது. உடனடியாக அடுத்த நல்ல ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிடலாம் எனப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா வந்து சினிமா சூழலையே மாற்றிவிட்டது.

தற்போது இந்தப் படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என தகவல்கள் உலவிவருகிறது. கூடிய சீக்கிரமே அது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாவுடன் ப்ரியா ஆனந்தும், ஜப்பானைச் சேர்ந்த சுமோ வீரர் Yoshinori Tashiro நடித்திருக்கிறார்கள். பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செஞ்சிருக்காரு. இந்தப் படம் தவிர சிவா நடித்து, பார்ட்டி, இடியட் என சில படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories