சினிமா

நேரடியாக OTT ரிலீஸுக்கு தயாராகும் அக்‌ஷய் குமார் படம்... வாங்கப்போவது யார் தெரியுமா?

ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் தான் `பெல்பாட்டம்'.

நேரடியாக OTT ரிலீஸுக்கு தயாராகும் அக்‌ஷய் குமார் படம்... வாங்கப்போவது யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரஞ்சித் எம் திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் படம் தான் `பெல்பாட்டம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க லண்டனில் நடந்தது. கொரோனா முதல் அலை வந்தபோது, இந்தியாவில் பல படங்களின் ஷூட் நிறுத்தப்பட்டது.

ஆனால், பெல்பாட்டம் டீம் அந்த சமயத்தில் தான் மொத்த ஷூட்டிங்கையும் நடத்தினார்கள். இந்தப் படத்தின் தலைப்பையும், 80களில் நடக்கும் கதை என்பதாலும், இது கன்னடத்தில் வெளியான `பெல்பாட்டம்' படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.

பிறகு இது அது இல்லை, 80களில் நடந்த நிஜ சம்பவத்தையும், அதில் சம்பந்தப்பட்டவர்களையும் பற்றிய படமாகவும் உருவாகியிருக்கிறது என சொல்லப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதமே இதனுடைய படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டது. மே 28ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறப்பட்டது. இப்போது கொரோனா காரணமாக படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது படக்குழு.

இப்போதைக்கு படத்துக்கு பேசப்பட்டிருக்கும் விலை 150 கோடி. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. சீக்கிரமே அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories