சினிமா

ஆஸ்கர் வென்ற படத்தின் ரீமேக்கில் டிகாப்ரியோ ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆஸ்கர் வென்ற படத்தின் ரீமேக்கில் டிகாப்ரியோ ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்கர் விருதுகள் சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது, Mank, Nomadland, Tenet, Soul, Sound of Metal, Judas and the Black Messiah எனப் பல படங்கள் விருதுகளைக் குவித்தது.

இதில் Best International Feature Film என்கிற பிரிவின் கீழ் Another Round திரைப்படம் விருதை வென்றது. டேனிஷ் மொழித் திரைப்படமான இது ஆஸ்கர் உட்பட பல உயரிய விருதுகளை வென்றிருக்கிறது. மேலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Thomas Vinterberg இயக்கிருந்த இந்த படத்தில் தன்னுடைய தீவிரமான நடிப்பால் அசத்தியிருந்தார் Mads Mikkelsen. இவ்வளவு வரவேற்பு பெற்ற ஒரு படம்ன்றதால மற்ற மொழியில ரீமேக் பண்ண ஆர்வம் உண்டாவது சகஜமானது.

ஆஸ்கர் வென்ற படத்தின் ரீமேக்கில் டிகாப்ரியோ ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அந்த வகையில் Another Round படத்தை, ஹாலிவுடில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். அந்த ரீமேக்கில் Mads Mikkelsen நடித்த கேரக்டரில் Leonardo DiCaprio நடிக்க ஒப்பந்தமாகிருப்பதாக சொல்லப்படுகிறது.

Mads Mikkelsen நடித்திருந்த ஸ்ட்ரி டீச்சர் மார்டின் கேரக்டருக்கு டிகாப்ரியோ பொருத்தமாக இருப்பார் என அவரோட ரசிகர்கள் சோசியல் மீடியாக்கள்ல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

டிகாப்ரியோ இப்போது Killers of the Flower Moon படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப் படத்தின் வேலைங்களை முடித்ததும் இந்த ரீமேக் பட வேலைங்களை துவங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுது.

banner

Related Stories

Related Stories