சினிமா

சர்தார்க்கு மாறிய கார்த்தி; கிங் காங் ஸ்டைலில் சூப்பர் ஹீரோ படம் எடுக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!

 சர்தார்க்கு மாறிய கார்த்தி; கிங் காங் ஸ்டைலில் சூப்பர் ஹீரோ படம் எடுக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் நூறாவது படமாக உருவானதுதான் விஜய் நடித்த `மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடித்து அட்லீ இயக்கியிருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்கு அடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் ஒரு படத்தை தேனாண்டாள் தயாரிக்க இருக்கிறது எனக் கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது தேனாண்டாள் நிறுவனம் தங்களின் அடுத்த படம் பற்றி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. India’s first giant super hero என இந்தப் படத்தைப் பற்றி குறிப்பிட்டு அறிவிப்பை வெளியிட்டனர். ஹாலிவுடில் உருவான `கிங் காங்' படம் போன்று தமிழில் உருவாக இருக்கும் படம் பற்றிய அறிவிப்புதான் அது. இந்த, இந்திய கிங் காங்கிற்கு `கபி' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இதற்கான கான்செப்ட் டீசரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு, `டிமாண்டி காலனி', `நட்பே துணை' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.தேனாண்டாள் நிறுவனத்துடன் இணைந்து லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திரனும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சீக்கிரமே இந்தப் படம் பற்றிய மற்ற தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரும்புத்திரை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். அதன் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் `ஹீரோ' படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு கலவையான வரவேற்பே இருந்தது. இதன் பிறகு இவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இப்போது அந்தப் படத்தின் தலைப்பு `சர்தார்' என மோஷன் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

சிறுத்தை, காஷ்மோரா படங்களைப் போல, இந்தப் படத்தில் கார்த்திக்கு இரு கதாபாத்திரங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது ஒரு உளவாளி கதையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், சிம்ரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். சுல்தான் படத்திற்குப் பிறகு மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கார்த்தி. அந்தப் படத்திற்காக நீளமான முடி தாடியுடன் இருந்த கார்த்தி, அதே கெட்டப்பில் `சர்தார்' படத்தின் ஒரு போர்ஷனில் நடிக்க இருக்கிறார். அதன் படி இந்தப் படத்தின் படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.

`பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்கு மேல் துவங்கும் என சொல்லப்படுகிறது. அது துவங்கியதும், கார்த்தி தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டு, `சர்தார்' படத்தின் இன்னொரு கெட்டப்புக்கு மாறி ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஜார்ச் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

banner

Related Stories

Related Stories