சினிமா

விஸ்வநாதன் ஆனந்த பயோ பிக் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கும் அனிருத் ? - சினி அப்டேட்!

தமிழில் அதிகளவிலான படங்களை கைவசம் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட்டிற்கும் செல்ல இருக்கிறார்.

விஸ்வநாதன் ஆனந்த பயோ பிக் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கும் அனிருத் ? - சினி அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் கமல்ஹாசனுடைய `விக்ரம்', விஜய்யின் 65வது படம், தனுஷின் 44வது படம், விஜய் சேதுபதியின் `காத்துவாக்குல ரெண்டு காதல்', சிவகார்த்திகேயனின் `டான்' என எல்லா டாப் ஹீரோக்களின் படங்களையும் கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி ஹீரோ படங்களுக்கு இசையமைக்கிறார்.

தற்போது பாலிவுட் திரையுலகில் அனிருத் கால்பதிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தமிழ் - இந்தியில் உருவான `டேவிட்' படத்தில் ஒரு இந்தி பாடல் மட்டும் இசையமைத்திருந்தார்.

அந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாது இந்தியில் பெரிய ஹிட்டானது. ஆனால், இந்த முறை இந்தியில முழுப் படம் ஒன்றுக்கு இசையமைக்க இருக்கிறாராம். `தனு வெட்ஸ் மனு', `ராஞ்சனா', `ஸீரோ' படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராயின் படத்திற்குதான் அனிருத் இசையமைக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

ஆனால், அது எந்தப் படம் என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அடுத்து உருவாகிக் கொண்டிருக்கும் `அத்ரங்கி ரே' படத்திற்கு ரஹ்மான் தான் மியூசிக். அடுத்ததாக ஆனந்த் எல்ராய், செஸ் ப்ளேயர் விஷ்வநாத் ஆனந்தின் பயோபிக்காக `ரக்ஷா பந்தன்' படத்தை இயக்க இருக்கிறார். ஒருவேளை இந்தப் படத்தின் மூலமாக அனிருத்தின் பாலிவுட் என்ட்ரி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

banner

Related Stories

Related Stories