சினிமா

வெளியானது சல்மானின் ‘ராதே’ ட்ரெய்லர் : Race 3 படத்தின் Deleted காட்சிகளா என வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

சல்மானின் ‘ராதே’ திரைப்படம் ஒரே நேரத்தில் தியேட்டர், OTT, DTHல் வெளியாக இருப்பதாக தகவல்.

வெளியானது சல்மானின்  ‘ராதே’ ட்ரெய்லர் : Race 3 படத்தின் Deleted காட்சிகளா என வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சல்மான் கான் நடிப்பில் ரிலீஸாக இருக்கும் படம் ’ராதே’. பிரபுதேவா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி, ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் கோலிவுட் சினிமாவிலிருந்து பரத், மேகா ஆகாஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 'வெடரன்' என்கிற தென்கொரிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இது.

இந்தப் படத்தை கடந்த வருடமே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது. படத்தின் டிவி, டிஜிட்டல், தியேட்டர், மியூசிக் ரைட்ஸ் என எல்லாவற்றையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு, ரூ.230 கோடிக்கு சல்மான் விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், கண்டிப்பாக படம் தியேட்டரில்தான் முதலில் வெளியாகும் என சல்மான் கான் சொல்லியிருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ’ராதே’ திரைப்படம் ஒரே நாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்திலும், தியேட்டர்களிலும் ரிலீஸாகிறது என கிசுசிசுத்தது பாலிவுட் மீடியாக்கள்.

அதன் படி இப்போது மே 13ம் தேதி தியேட்டர்களிலும், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி ஜீ ப்ளெக்ஸ் தளத்திலும் ’ராதே’ திரைப்படத்தப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டாடா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி உள்ளிட்ட டிடிஹெச் மூலமாவும் பணம் செலுத்திப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று `ராதே' படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories