சினிமா

விஜய்யின் அடுத்த படத்திலும் யோகிபாபு? - உறுதியானது 4வது முறையாக கூட்டணி!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கார் யோகிபாபு.

விஜய்யின் அடுத்த படத்திலும் யோகிபாபு? - உறுதியானது 4வது முறையாக கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் இப்போது லீடிங்கில் இருப்பது யோகிபாபுதான். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் எல்லாருடைய படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் லீட் ரோலில் நடித்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியான `மண்டேலா' படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

முதன்முறையாக யோகிபாபுவை ஒரு முழு நீளப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரமாக ரசிகர்கள் வரவேற்றிருக்கிறார்கள். தொடர்ந்து தனுஷின் `கர்ணன்' படத்திலும் யோகிபாபுவுடைய ரோல் பெரிய வரவேற்பை பெற்றது. அஜித் உடன் வீரம், வேதாளம், விஸ்வாசம்' என மூன்று படங்களில் நடித்தவர் `வலிமை' படத்திலும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் `அண்ணாத்த' படத்திலும் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கும் படத்திலும் நடிப்பதாக ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கிறார் யோகிபாபு. நெல்சன் இயக்கிய முதல் படம்`கோலமாவு கோகிலா' படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் உடன் மெர்சல், சர்கார், பிகில் படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் நான்காவது முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். தொடர்ந்து காமெடியன், லீட் ரோல் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.

banner

Related Stories

Related Stories