சினிமா

இந்தி ரீமேக் சர்ச்சை: ‘கதை என்னுடையதுதான்’ அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டிஸுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!

எழுத்தாளர் சுஜாதா எழுதிய அந்நியன் பட கதையோட உரிமையை பணம் கொடுத்துதான் வாங்கிட்டதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிந்தார்.

இந்தி ரீமேக் சர்ச்சை: ‘கதை என்னுடையதுதான்’ அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டிஸுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுகிற இயக்குநர் ஷங்கர் முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 மாதிரி பல வெற்றி படங்களை கொடுத்திருந்தார். கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்துடைய படப்பிடிப்பு தளத்தில் கடந்த வருடம் கிரேன் விபத்து ஒன்று நடந்தது. இதுற்குப் பிறகு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் திரும்ப தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ஒரு படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரு தினங்கள் முன்பு அந்நியன் படத்தை இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்கிறார் என்ற அறிவிப்பும் வந்தது. 2005ல் ஷங்கர் இயக்கதில் விக்ரம் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் அந்நியன். இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் அறிவிப்பு வெளியானதும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது லைகா நிறுவனம்.

"எங்கள் நிறுவனத்துடனான இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும்" என்பது அவர்கள் தரப்பு வாதம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டிருந்த நிலையில், அதைத்தாண்டி 236 கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்திருப்பதாக சொல்லியிருந்தது லைகா நிறுவனம். ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இயக்குநர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.

லைகா தரப்பில் “இவ்வளவு செலவு செய்தும் படத்தின் 80% வேலைகள் தான் முடிந்திருக்கி” என சொல்லி மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும் போது, அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் "அந்நியன் படக் கதை எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது, எங்களிடம் அனுமதி வாங்காமல் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்யக்கூடாது" என நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய அந்நியன் பட கதையோட உரிமையை பணம் கொடுத்துதான் வாங்கிட்டதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் குறிப்பிட்டிந்தார்.

இந்தி ரீமேக் சர்ச்சை: ‘கதை என்னுடையதுதான்’ அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டிஸுக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!

இதுற்கு பதில் அளிக்கும் விதமாக ஷங்கர் தந்த விளக்கத்தில், “சுஜாதா அந்நியன் படத்திற்கு வசனம் மட்டும்தான் எழுதியிருந்தார், கதை என்னுடையது” என தெரிவித்டிருந்தார். இப்படி தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு, அவருடய உதவி இயக்குநர்கள், சிம்பு தேவன், அறிவழகன் போன்றோர் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் சில சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இந்த பிரச்சனையில் தங்களது ஆதரவை ஷங்கருக்கு தெரிவித்து #ISupportDirectorShankar என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories