சினிமா

“ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது” - இரவின் நிழல் படத்தின் குஷியான அப்டேட் கொடுத்த பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

“ஏ.ஆர்.ஆர் வாய் கேட்பது அரிது” - இரவின் நிழல் படத்தின் குஷியான அப்டேட் கொடுத்த பார்த்திபன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பார்த்திபன் இயக்கத்தில் `ஒத்த செருப்பு' படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரே நபர் நடித்த படமாக அவர் முயற்சி செய்திருந்தது பெரிய வரவேற்பைப் பெற்றது. கூடவே தேசிய விருதில் சிறப்பு நடுவர் விருதையும் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு, சிங்கிள் ஷாட்டில் எடுக்கப் போகும் `இரவின் நிழல்' படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

இதில் முழுநீளப் படமும் ஒரே ஷாட்டில் எடுப்பதற்கான தயாரிப்புகளில் இருக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை தயாரித்து நடிக்கவும் இருக்கிறார். இதில் நடிப்பவர்களை அழைத்து, படத்துக்காக போடப்பட்ட செட்டில் ஒத்திகைகள் நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என அறிவித்திருக்கிறார் ரஹ்மான்.

பல வருடங்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்க இருந்த `ஏலேலோ' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படம் நிகழாமல் போனதால் பார்த்திபன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையாமல் போனது. தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மான், "பார்த்திபன் சார் ஒரு படம் பண்றார் அதுல, ஒரு வித்யாசமான பாட்டு ட்ரை பண்ணியிருக்கேன்" என தெரிவித்தார். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்த பார்த்திபன்,

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்

அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!

Yes SIR is IN (Iravin Nizhal) பெருமை!

அருமையில் - 3 பாடல்கள் கைவசம்

அருகாமையில் இன்னொன்று-promotional song

So...

So hhaappppyy"

எனப் பதிவு செய்திருந்தார்.

banner

Related Stories

Related Stories