சினிமா

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கை இயக்கும் புஷ்கர் காயத்ரி... விஜய் சேதுபதி ரோலில் நடிப்பது யார் தெரியுமா?

விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கையும் புஷ்கர் காயத்ரியே இயக்குவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கை இயக்கும் புஷ்கர் காயத்ரி... விஜய் சேதுபதி ரோலில் நடிப்பது யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

`ஓரம் போ', `வ', படங்களுக்குப் பிறகு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் 2017ல் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் விக்ரமாகவும், விஜய் சேதுபதி வேதாவாகவும் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படம் வெளிவந்த சமயத்திலிருந்தே, இதன் இந்தி ரீமேக் பற்றிய தகவல்கள் வந்தவாறு இருந்தது. ஷாரூக்கானும் - விஜய் சேதுபதியும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இதில் மாதவன் நடித்த விக்ரம் ரோலில் சைஃப் அலிகானும், விஜய் சேதுபதி நடித்த வேதா ரோலில் ஹ்ரித்திக் ரோஷனும் நடிக்கிறார்கள், இந்தி ரீமேக்கையும் புஷ்கர் காயத்ரியே இயக்குகிறார்கள் என தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

தற்போது ஹ்ரித்திக், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் `ஃபைட்டர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், `விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிற்கான தயாரிப்புகளை ஆரம்பிப்பார் எனச் சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories